Saturday 23 March 2013

அன்புள்ள அப்பாவுக்கு

அன்புள்ள அப்பாவுக்கு
தாயிற்சிறந்த கோயிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
தந்தை போலொரு மனிதர் தரணியிலில்லை
என் தந்தை உமை பற்றிய நினைவுகள்
நீங்கவில்லை கனவுகளும் ஓயவில்லை
அந்த நாள் நினைவுகளும் எங்களோடு
வாழ்ந்த அந்தநாள் ஞாபங்கங்களும் !
நிழலாடு கின்றதையா ! நெஞ்சத்தில்
கனவாகிப் போனதய்யா!
நின் தாயின் ஊரிலேதான்
என் தாயைக் கண்டெடுத்தீர்,
என் தாயின் ஊரினிலே
வாழ்க்கையை தொடங்கிட்டீர்
ராஜம்மா எந்தாயை தாரமாகிக்யபோதே
ராஜாவா ஆனீங்க ராசனாகவே வாழ்ந்தீங்க
இவர் போல துணிதைக்க யாருஇகுக்கா
ஊருக்குள்ள ! என்ற பேரு பெற்றீங்க ,
நல்ல பேரும் பெற்றீங்க நாகரீகமா வளந்தீங்க
ஏற்றமானா வாழ்க்கையில
எங்கநாலு பேரை பெற்றீங்க
என் அன்னை, தன் தமக்கையின்
மகனையும் தன்மகன் போல்
வளர்த்துவர நால்வரோடு ஐவரானோம்
நாங்க ஒண்ணா வளர்ந்து வந்தோம்
1975 களில் எடச்சுளார் கடை என்றால்
ஏகப்பட்ட மவுசு அந்தக்காலத்தில்
மளிகை கடை நடத்தும் போதே
மக்கள் சொன்ன  யோசனை கேட்டு
புகையிலை வியாபாரத்தை
புதுசா தொடங்கினீங்க
ஊரில் பலபேர், வேலைக்கும் வந்தாங்க
விருப்பமா வேலையுஞ் செஞ்சாங்க
கோவையிலே வெட்டிய புகைஇலை
கொத்துக்கொத்தாய் கொண்டுவந்து
வண்டியில் இருந்து இறக்கி போட
வந்தவங்க  எத்தனை பேர்?
ரெண்டு மூணு இலைகளை
தலைகீழா பிடித்துத் தூக்கி
பனை இளங்கீற்றினிலே பக்குவமாய்
முடிச்சி போட முன்வந்தவங்க
எத்தனை பேர்?
சுள்ளயில உள்ளபோய் பட்டியலில்
கட்டியவங்க பட்டியலில் எத்தனை பேர்
பச்சயாய் இருந்த இலை கருப்பாய் ஆனபின்னே
முடிந்த முடிச்சி களை அவிழ்க்க
முன் வந்தவங்க எத்தனைபேர்
அவிழ்ந்த இலைகளை பின்
நெட்டை தலையாய் வைத்து
முடிமுடியாய் கட்டவந்தமுதியவர்கள்
எத்தனைபேர்
முடித்த முடிச்சுகளை  மூழ்கிஎடுக்க
கடல் நீரைக் கொண்டுவர
காளை பூட்டிய களையர்கள்
எத்தனைபேர்
தலை முடிபோல் பொதிந்த புகையிலையை
கத்தையாய் கட்டிவிட இளங்கன்னியர்கள்
எத்தனை பேர்
சிப்பங்களாய் கட்டிவிட்ட
சிப் பாய்கள் எத்தனை பேர்
டெய்லராய் இருந்தபோது காஜா போட
வந்த காளையர்கள்  எத்தனைபேர்
எத்தனை பேர் வந்தாலும் அத்தனை
பேருக்கும் வேலை கொடுத்தீர்
மாமனாரும் துணைக்கு இல்லை
மைத்துணரும் துணையில் இல்லை
உம் உழைப்பால் நீர் உயர்ந்தீர்……..
ஊருக்கே உத்தமர் ஆனீர்……
யார் கண்பட்டதோ ,ஊர்கண்தான் பட்டதோ
புகையிலை புகை-இலை ஆனாது
பூக்காத புகையிலை பூத்துப்போனது
நாட்டமாக  செய்ததொழில்
நட்டம் வந்ததென நாலுவயலையும்
வந்த விலைக்கு வித்தீங்களெ
நமக்கு பணம் தரவேண்டியவர்கள்
பணம் தந்தாலே இன்னும்
நாலு வயல்வாங்கலாமே
நம் கடை பாக்கி கொண்டவர்களிடம்
வசூல் செய்திருந்தால்
பலமகசூல் பெருகியிருக்குமே!
சொத்துக்காக சொந்தங்கள் பகைத்தன
சொந்தமே சூனியமும் வைத்தன
நீர் நட்பையும் சொந்தத்தையும்
பெரியதாககருதியது  சமீபத்தில் தான்
எனக்குப்புரிந்தது,
1970 களில் எழுதப்பட்ட பழைய கடிதங்கள் கிடைத்தன
மாமனாரும் மைத்துணரும் எழுதிய கடிதம் அது ,
ஒன்றில் பாசமிருந்தது மற்றொன்றில் வேசம் இருந்தது
ஒன்றில் விசயம் இருந்தது
இன்னொன்றில் விசமம் இருந்தது
அதே ஆண்டுகளில் உங்கள் நண்பர் எழுதிய
கடிதமும் பலகிடத்தது
சாமிக்கு நிகராகவே உங்களை வர்ணித்திருந்தார்
அவர் படித்த படிப்பு கூட உங்கள் செலவாம்
அவரே எழுதியிருந்தார்….
இப்படி எல்லோருக்கும் நல்லவராய்
இருந்து கொண்டு எல்லோரிடமும்
அன்பை பொழிந்துவிட்டு நாங்கள் உங்கள்
அன்பை சுமந்து அல்லல் படும்படியாய்
ஆக்கிட்டுச்சென்றீரோ!! அவமாய் சென்றீரோ!
நாளெல்லாம் உழைத்ததால் களைத்தீரோ
உரங்காமல் சென்றீரோ
எங்கே இருக்கின்றீர் எப்படி இருக்கின்றீர்
எங்கெல்லாம் தேடுகின்றோம்
என்றென்றும் உம் நினைவால் வாடுகின்றோம்
நீர் இறந்தசெய்தி கேட்டு ஊரே
திரண்டு வந்து ஒப்பாறிவைதனரே!
ஓயவில்லை அந்நினைவு
ஐந்தாறு மாதங்களில் அவிந்து விடும் அவர்
நினவு என பதினாறுக்கு வந்தாரும்
சொன்னார்கள் வாயார அழுதார்கள் !
ஆண்டுகள் ஆயினும்
உம் நினைவுகள் அழியவில்லை
எம் நெஞ்சமும் மற‌‌க்கவில்லை!
ருகள் பல செய்த போதும் எனை
ன்னித்தீர்கள், தன்மானம் ஒன்றையே
மதிக்கவேண்டுமென கர்பித்தீர்கள்
தந்தை சொல் கேட்ட தணையன்
தரங் கெட்டும்  போனதில்லை,
ந்தை ழி ந்தோன் என்னும்
ங்கெட்டும்  போனதில்லை !
நீர் இல்லாத இவ் வாழ்க்கை
நீரில்லா மீன் போலானது!
நீரில்லா நீறோடையில்
நீந்துவதற்கு "நீர்" இல்லையே!
 

காலம் மாறிப்போச்சு:


அம்மிகள் காணாது போனதோடு
அம்மாக்களும் காணாது போனார்கள்!
மம்மியாய் வாழ்கின்றவர்கள் டம்மியாய்

வாடகைக்கும் கிடைக்கின்றனர் !
கணினி என்பது மனிதவாழ்வில்

கணிசமான அங்கமாகிவிட்டது!
கணினியை கற்போர் காமத்தையும்

பயிலுகின்றனர்!
மென்பொருள் நிருவனங்களில்

படுக்கையறைகளும்
பதுங்கியிருக்கின்றனவாம்!
திரைப் படங்களெல்லாம்

திரை யில்லாபடங்களாகவே
காட்சியளிக்கின்றன!
தமிழ்பாடல்களில் ஆங்கிலமே

அதிகமாயிற்று!,



அங்கங்களை  மறைத்த
ஆடைகள் அங்கங்கு  மறைப்பதால்
ஆபாசமாகவே இருக்கின்றன!
குட்டிகளுக்கெல்லாம்  புட்டிகளே

பாலூட்டுகின்றன!
பாலூட்ட  படைத்தவைகளே !

படு கவர்ச்சியாக் கப்படுகின்றன!
_வின்  பாலெல்லாம்

ஆவி  இல்லாது  பைகளிலும்
கிடைக்கின்றன!
 வியாபாரத்திற்கு விளம்பரம் என்பது
 போய் ,பொய் விளம்பரமே
வியாபாரமாக்கப்படுகின்றன!
அசல் என்ற உண்மை போய்
பொய் போலிகளே புரள்கின்றன!
பொன் நகை என்பது
பெண் நகையாகிவிட்டது !
குங்குமத்தில் வைத்த

பொட்டு நிறம் மாறியதோடு
வடிவமும் மாறி  ஒட்டவசதியாய்
பசையாக்கப்பட்டுள்ளது!
பெண்கள் ஆண்களின்

உடையிலேயே  அலாதியாய்
உள்ளனர்!
உடன் உறவுகளுக்குள்  உடனிருந்து

மகிழ  வேண்டியவர்கள்
உடல்  உறவுக்குள்ளே
உல்லாசமயிருக்கின்றனர்!
கூட்டக குடி இருந்தவன்
தனித்தனியே தங்கிவிட்டான்
குடிப்பதும் புகைபதும்
புனிதமாகிவிட்டது
துச்சாதனர்களே! காவலுக்கு
களமிரக்கப் படுகின்றனர்!
லட்சியம்  என்பது  லஞ்சமாகவும்

லச்சமாகவும்  மாறிவிட்டன!
பிறக்கும் குழந்தை கூட
 கை விரலுக்குள் கை பேசியை
மறைத்து வைத்துள்ளன!
பள்ளிகளிலும் பள்ளியறை

உள்ளதாம்!
இயந்திரதில் கூடஇதயம்
இயங்குகின்றனவாம்
மனிதனே மனிதனை
கொல்லும் மனிதாபிமானம்
மலிந்துவிட்டது!
உலகம் நாடகமேடையாம்
,
ஆம் மக்கள் நடிப்பதையே

வாழ்க்கை யாக்கிட்டார்கள்
காலங்கள் மாறலாம்,
நாகரீககோலங்கள் மாறலாமா
?
இந்தக்கால மாற்றங்களுக்கு

வரும் காலங்களே!
பதில்சொல்லட்டும்-






மனிதனின் மாண்பு

மனிதன் இவனொரு மகத்தா பிறவி
மண்ணில் இவனொரு புண்ணிபிறவி
கூடிவாழ்வது தான் இவனது பழமை
குடித்து வாழ்வது தான் இவனது புதுமை
கொடுத்துக்கொடுத்தே வாழ்ந்தவன்
கெடுத்திக் கெடுத்தே வாழ்கின்றான்
புறாவில் தூதனுப்ப தொடங்கியவன்
புதுபுது தூதுகள் நிதம்
தினம் படைக்கின்றான்
குரங்கிலிருந்துதான் பிறந்தோம்
என்பதை தன் குணங்கொண்டே
அவ்வப்போது உணர்த்துகின்றான்
கொலையும் கொள்ளையுமே
கொள்கையாக்கியவன்
வலையை விரிப்பதையே
கலையாக்கிக் கொண்டான்
விலைகொடுத்தே பட்டமும்
பதவியும் பெறுகின்றவன்,
துப்பாக்கியும் தோட்டாவுமே
துணைக்கு வைத்திட்டான்
அதிகாரம் கொண்டவன்
சதிகாரனாகவே உள்ளான்
இலவசங்கள் பல உண்டென்பான்
இவன் வசமுள்ள  ஓட்டுக்காக
பதவிக்கி வந்ததுமே
பழைமைதனை மரப்பான்
பரிதவிக்க விட்டுடுவான்
பாமரனை… ..
ஓட்டிட்டவனை
ஓட்டாண்டியாக்கிடுவான்
விசுவாசி நானென்பான்
விலைவாசியை ஏற்றிடுவான்
மின்வெட்டை அதிகரித்து
கல்வெட்டில் காவியம்படைப்பான்
மானத்தின் உச்சமென
பிறந்தவன் அவ மானத்தின்
அச்சமென ஆகிவிட்டான்
கர்மவீரனை கூட தோற்கடித்தவன்
மாவீரனையும் மண்டியிடச்செய்தான் .
மனிதமாண்பு பற்றிப்பேசுகையில்  
மகாத்மா ஒருவரையே
தன் மனதினுள்: புதைத்தான்,
அவரையும் வாழவிடாது
கொன்றே புதைத்தான்,
அவர் கொள்கையாவது
வாழவிட்டு மனித மாண்புதனை போற்றுவோம்!