Saturday 23 March 2013

காலம் மாறிப்போச்சு:


அம்மிகள் காணாது போனதோடு
அம்மாக்களும் காணாது போனார்கள்!
மம்மியாய் வாழ்கின்றவர்கள் டம்மியாய்

வாடகைக்கும் கிடைக்கின்றனர் !
கணினி என்பது மனிதவாழ்வில்

கணிசமான அங்கமாகிவிட்டது!
கணினியை கற்போர் காமத்தையும்

பயிலுகின்றனர்!
மென்பொருள் நிருவனங்களில்

படுக்கையறைகளும்
பதுங்கியிருக்கின்றனவாம்!
திரைப் படங்களெல்லாம்

திரை யில்லாபடங்களாகவே
காட்சியளிக்கின்றன!
தமிழ்பாடல்களில் ஆங்கிலமே

அதிகமாயிற்று!,



அங்கங்களை  மறைத்த
ஆடைகள் அங்கங்கு  மறைப்பதால்
ஆபாசமாகவே இருக்கின்றன!
குட்டிகளுக்கெல்லாம்  புட்டிகளே

பாலூட்டுகின்றன!
பாலூட்ட  படைத்தவைகளே !

படு கவர்ச்சியாக் கப்படுகின்றன!
_வின்  பாலெல்லாம்

ஆவி  இல்லாது  பைகளிலும்
கிடைக்கின்றன!
 வியாபாரத்திற்கு விளம்பரம் என்பது
 போய் ,பொய் விளம்பரமே
வியாபாரமாக்கப்படுகின்றன!
அசல் என்ற உண்மை போய்
பொய் போலிகளே புரள்கின்றன!
பொன் நகை என்பது
பெண் நகையாகிவிட்டது !
குங்குமத்தில் வைத்த

பொட்டு நிறம் மாறியதோடு
வடிவமும் மாறி  ஒட்டவசதியாய்
பசையாக்கப்பட்டுள்ளது!
பெண்கள் ஆண்களின்

உடையிலேயே  அலாதியாய்
உள்ளனர்!
உடன் உறவுகளுக்குள்  உடனிருந்து

மகிழ  வேண்டியவர்கள்
உடல்  உறவுக்குள்ளே
உல்லாசமயிருக்கின்றனர்!
கூட்டக குடி இருந்தவன்
தனித்தனியே தங்கிவிட்டான்
குடிப்பதும் புகைபதும்
புனிதமாகிவிட்டது
துச்சாதனர்களே! காவலுக்கு
களமிரக்கப் படுகின்றனர்!
லட்சியம்  என்பது  லஞ்சமாகவும்

லச்சமாகவும்  மாறிவிட்டன!
பிறக்கும் குழந்தை கூட
 கை விரலுக்குள் கை பேசியை
மறைத்து வைத்துள்ளன!
பள்ளிகளிலும் பள்ளியறை

உள்ளதாம்!
இயந்திரதில் கூடஇதயம்
இயங்குகின்றனவாம்
மனிதனே மனிதனை
கொல்லும் மனிதாபிமானம்
மலிந்துவிட்டது!
உலகம் நாடகமேடையாம்
,
ஆம் மக்கள் நடிப்பதையே

வாழ்க்கை யாக்கிட்டார்கள்
காலங்கள் மாறலாம்,
நாகரீககோலங்கள் மாறலாமா
?
இந்தக்கால மாற்றங்களுக்கு

வரும் காலங்களே!
பதில்சொல்லட்டும்-






மனிதனின் மாண்பு

மனிதன் இவனொரு மகத்தா பிறவி
மண்ணில் இவனொரு புண்ணிபிறவி
கூடிவாழ்வது தான் இவனது பழமை
குடித்து வாழ்வது தான் இவனது புதுமை
கொடுத்துக்கொடுத்தே வாழ்ந்தவன்
கெடுத்திக் கெடுத்தே வாழ்கின்றான்
புறாவில் தூதனுப்ப தொடங்கியவன்
புதுபுது தூதுகள் நிதம்
தினம் படைக்கின்றான்
குரங்கிலிருந்துதான் பிறந்தோம்
என்பதை தன் குணங்கொண்டே
அவ்வப்போது உணர்த்துகின்றான்
கொலையும் கொள்ளையுமே
கொள்கையாக்கியவன்
வலையை விரிப்பதையே
கலையாக்கிக் கொண்டான்
விலைகொடுத்தே பட்டமும்
பதவியும் பெறுகின்றவன்,
துப்பாக்கியும் தோட்டாவுமே
துணைக்கு வைத்திட்டான்
அதிகாரம் கொண்டவன்
சதிகாரனாகவே உள்ளான்
இலவசங்கள் பல உண்டென்பான்
இவன் வசமுள்ள  ஓட்டுக்காக
பதவிக்கி வந்ததுமே
பழைமைதனை மரப்பான்
பரிதவிக்க விட்டுடுவான்
பாமரனை… ..
ஓட்டிட்டவனை
ஓட்டாண்டியாக்கிடுவான்
விசுவாசி நானென்பான்
விலைவாசியை ஏற்றிடுவான்
மின்வெட்டை அதிகரித்து
கல்வெட்டில் காவியம்படைப்பான்
மானத்தின் உச்சமென
பிறந்தவன் அவ மானத்தின்
அச்சமென ஆகிவிட்டான்
கர்மவீரனை கூட தோற்கடித்தவன்
மாவீரனையும் மண்டியிடச்செய்தான் .
மனிதமாண்பு பற்றிப்பேசுகையில்  
மகாத்மா ஒருவரையே
தன் மனதினுள்: புதைத்தான்,
அவரையும் வாழவிடாது
கொன்றே புதைத்தான்,
அவர் கொள்கையாவது
வாழவிட்டு மனித மாண்புதனை போற்றுவோம்!


No comments: