Wednesday 7 May 2008

"சுனாமி"

என் விருப்பமும் திருப்பமும்
==========================
விருப்பம் இது கொஞ்சம் விசித்திரமானது !
பூத்துக்குலுங்கும் ரோஜா மலரில் தேன் உண்ண வண்டுக்குவிருப்பம்!
பூவையர் கூந்தலில் இருந்து சிரிக்க அந்த ரோஜாவுக்கு விருப்பம்!
என் எண்ணங்களில் தோன்றிய விருப்பங்களை எடுத்துக்கூற எனக்கும் கொஞ்சம் விருப்பம் !
அதிக‌ம் ப‌டித்து ப‌ட்ட‌ம் பெற‌ விருப்ப‌ம் !
ஆனால் ஏழ்மையால் ஏற்ப‌ட்டதோ திருப்ப‌ம் !
ப‌டித்த‌ ப‌டிப்பிற்கேற்ற‌ ப‌த‌வி பெற விருப்ப‌ம் !
ஆனால் ல‌ஞ்ச‌ம் என்றசொல்லால் ஏற்ப‌ட்ட‌தோ திருப்ப‌ம் !
வேலை யில்லாத்திண்டாட்ட‌த்தை ஒளித்திட‌வும் விருப்ப‌ம் !
ஆனால் வேலை தேடுவ‌தே வேலையானால் ஏற்படுமோ திருப்ப‌ம் !
நான் காத‌லித்த‌ அவ‌ளை கை பிடிக்க‌ விருப்ப‌ம் !
ஆனால் ஜாதி என்ற‌ சாக்க‌டையால் ஏற்ப‌ட்ட‌தோ திருப்ப‌ம் !
வ‌ர‌த‌ட்ஷ‌னை இல்லா திரும‌ண‌த்தில்தான் விருப்ப‌ம் !ஆனால் த‌ட்ஷ‌னை வேண்டாமென்றதால் ஏற்ப‌ட்ட‌தோ திருப்ப‌ம் !
போதையால் பாதை மாறிப்போவோரை திசைதிருப்பவும் விருப்பம்!
ஆனால் போதையே அவனுக்குப் பாதையானால் ஏற்படுமோ! திருப்ப‌ம் ஊழ‌ல‌ற்ற‌ ஆட்சியில் தான் என‌க்க்கு விருப்ப‌ம் !ஆனால் ஊழலே ஆட்சீயானால் நாட்டில் ஏற்படூமோ நல்ல திருப்பம் !
என் விருப்பங்க‌ள் யாவும் நிரைவேறினால் நல்ல‌ திருப்ப‌ங்க‌ளும் உருவாகுமே. . . . . . !

சுனாமி
=========
கடற்கரையில் கட்டிய மணல் வீடுகள்
கடல் அலைகளால் அழிவதைக்கண்டிருக்கிறேன்
பேரலை வந்து வீடுகளியும் அழித்த
பேரளிவை அன்றுதான் கண்டேன்

பெளர்ணமியன்று கடல் கொஞ்சம்
கொந்தளிக்கு மெனச்சொன்னார்கள்
மூர்கத்தனமான கொந்தளிப்பால்
மூர்ச்சையானது எத்தனை உயிர்கள்

யாரையோ தேடித்தேடி அவர் வராததால்
கரைவந்து திரும்புகிறாய் என
கண்ணியமாய் நினைத்தேன் ஆனால்
நீதேடிய உயிர்களும் உடல்களும்
உடமைகளும்தான் எத்தனை எத்தனை

உன் அலைகளை எம்மக்கள்
பார்த்துரசிப்பதால் தான் அடிக்கடி
வந்துபோகிறாய் என வாஞ்ஞையோடு
இருந்த என்னை வஞ்சித்துவிட்டாயே

கடல் அலைபோலத்தான் மனிதவாழ்கையும்
இன்பமும் துன்பமும் வந்துவந்து
போகுமென பெரியோர்கள் சொல்லகேள்வி
அதனால் தானோ என்னவோ
அமைதியாய் வாழ்ந்த எம் மானிட
உயிர்களை சுனாமி என்ற பினாமியால்
வந்து வந்து போக வைத்தாயே

மக்கள்கூட்டம் அதிகமானால்
அலைகடெலென கூட்டம் என்போம்
அதனால் தான் அலையால் கூட்டம்
கூட்டமாய் கொன்றுகுவித்தாயோ

என் சமுதாயத்தில் ஒரு உயிர்
போனாலும் ஓரயிரம் சடங்குகளும்
சம்பிரதாயங்களும்,சட்டதிட்டங்களும்

ஆனால் அன்று உன் கோரப்பசியால்
உயிரை உணவாக்கி உடலை
கழிவாக்கியனாயே!உன்னால்
உயிர்போன உடல்களை ஒரேகுழியில்
ஒரேசடங்காய் போட்டுபுதைத்த
காட்சிக் கொடுமையை என்னவென்று
சொல்வேன் எப்படித்தான் மரப்பேன்

சாவதர்காகத்தான் பிறந்தோமென்றாலும்
எதையாவது சாதிக்கத்துடிக்கும்
என் சமூகத்தை உனக்கேற்ப்பட்ட
தாகத்தால் தண்ணீரால் உயிர் குடித்தாயே!

சித்தர்கள் வாழ்ந்திட்ட சிங்கார
பூமியிலே புத்தனும் வாழ்ந்திட்ட
புண்ணிய பூமியிலே எத்தர்கள் ஏகம்பேர் இருக்க
பாவம் ஏழைகளை பார்த்து ஏவல்தனை புரிந்தாயோ

உன் கோரப்பசி எனும் கொடும் பார்வை
என்மீது படாததால் உயிர்தப்பினேன்!

என் ஒருவன் உயிர் தந்திருந்தால்
நீ பலி எடுத்த உயிர்களை விட்டிருப்பேன்
எனச் சொல்லி இருந்தால் ஓடோடி
வந்து உன் காலடியில் மாண்டிருப்பேன்!

குடந்தையில் கருகிய குஞ்சுகளால்
ரணம் இன்னும் ஆரவில்லை அதர்குள்
வெந்த புண்ணில் வேல் பாச்சினாயே!


தாண்டவம் கேள்விப்பட்டிருக்கிறேன்
ஆனால் அன்று நீ ஆடிய கோரத்தாண்டவம்
இதுவரை பார்த்ததில்லை
இனியும் பார்க்க விருப்பமில்லை

ஆர்ப்பரிக்கும் அலை களால்
ஆள்பரிக்கும் அவலமினி வேண்டாம்
இனியும் தலை தூக்கவேண்டாமென
தயவாய் வேண்டுகிறேன்!

(சுனாமியின் போது எழுதிய கவிதை)



மீண்டும் வேண்டும் விடுதலை “





பாரதி பாடித் துடித்த விடுதலை !
காந்தி மகான் காணத் துடித்த விடுதலை !
பகலுமன்றி இரவுமன்றி நள்ளிரவில்
விடியலாய் விடிந்தது ,விருப்பமாய் விளைந்தது.
விடுதலை தேசமாயினும் மீண்டும் ,
”வேண்டும் விடுதலை” என வேண்டித்தான்
நிற்கின்றோம் விருப்பித்தான் கேட்கின்றோம்.
வறுமையும், ஊழலும் நிரந்தரம் ஆகிவிட்டது
விலைவாசி உயரத்தில் , விசுவாசம் பள்ளத்தில்
உள்ளத்தின் கனவுகளில் லச்சமும் கோடியுமே !
கல்லறை நிலங்கள் கூட காணாமல் போகும் நிலை
சில்லறை போல் வாணிபமும் சிதறியே போன கதை
அண்டைநாட்டு தொழிலாளிகள் நம்நாட்டின் முதலாளிகள்
தண்ணீர் தண்ணீர், எனக் கண்ணீர் வடிக்கப் பல,
தேசங்கள் இருக்க,  பாட்டில் போட்டு விற்றுவரும்
பார்களையும் தாண்டி இன்று அரசே விற்கிறது.
பாஸ்மார்க் வாங்கவேண்டியவன் டாஸ்மாக் வாயிலில்...
பாதைகாட்டவேண்டிய அரசு போதைஏற்றும் வேலையில்...
பொதுத்துறை எல்லாம் தனித்துறை ஆக்கிவிட்டால்
துரை களுக்கு  இங்கே என்ன வேலை ?
சாதிக்க பிறந்தவனை சாதிக்குள் மாட்டிவிட்டு
மதமும், மொழி யுமாய் பிரித் தாளும்
சூழ்ச்சிக்கு , வீழ்ச்சியே ! என்றும் காட்சியாய் வேண்டும்  
தாத்தா கொடுத்ததை பேரன் கெடுப்பதும்,
மாமியார் தந்ததை மருமகள் எடுப்பதும் என,
மாறி மாறி தொடர்ந்த கதை முடிந்தது ,
ஆனால் இப்போது முடிந்த கதை  மீண்டும் தொடந்ததே!
என் சாதி, என் மதம் என சாக்கு போக்கு
சொல்லாமல் வாக்கு மாற்றி அளித்துவிட்டால்
உழைப்பவனுக்கு அரியணை கிடக்கும்,இதுவரை
சொன்ன சொல்லுக்கும் விடுதலை கிடைக்கும்,  
நம்மோடு சிறைபட்டு  நிற்கும் ஒப்பந்தத்திக்கும் ,
விடுதலை கிடத்து விடும்,  BSNL வீதியில் நாமெல்லம்
நிரந்தரமாய் வலம் வரலாம்  .

                               ஐ.எஸ். சுந்தரக்கண்ணன்



விழிப்புணர்வு



எத்தனை கடவுள்கள் எததனை மதங்கள்
 இத்தனை இருந்தும் இயம்புவ தென்ன?
இயன்ற வரை பிறருக்காய் இயல்பாய் உதவிடு
வாழும்வரை கூட வருவோர் மனம்
வலிக்காமல் வாழ்ந்திடு
வந்தது ஒரு முறை வாழ்வதும் ஒருமுறை
வாழ்ந்த வாழ்க்கையை வாழ்த்தவேண்டும்
தலைமுறை, நம் பெயரை ஊர் சொல்லவேண்டும்
பலமுறை, உலகமே போற்ற வேண்டும்
ஏழுதல முறை.1!!

சாதிமதமில்லா சனத்தை படைப்பதும்
ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை உடைப்பதும்
சாலையை கடக்க விழி இலாருக்கு வழிகாட்டவும்
பாலையை பண்படுத்தி பாங்காய் பயிர் இடவும்
உழவுத்தொழிலால் ஊரும் தழைத்திட வும்
களவுத் தொலின்றி கண்னியமாய் வாழ்ந்திடவும்

நோய் நொடிகள் இல்லா சமூகம் படைக்க
மாசில்லா தரணியில் கொசு இல்லாதிருந்தாலே
மானிடனை கொண்ட நோய் மாண்டு விடும் 
மறுகணமே,பிள்ளையின் பட்டு போன்ற பாதமது
சொட்டு சொட்டாய் மருந்திட்டால்
இளம் பிள்ளை  வாத மெனும் ஊனமிலா து
மனிதசனம்  படைத்திடலாம் ,

அவன் திட்டமிட்டு
படித்திட்டால் பின் நாளில் சோற்றுகு பஞ்சமில்லா
பெருவாழ்வு வாழ்ந்திடலாம் வளமுடனே!
காலை முதல் மாலை வரை கண்ணியம் மாறாது
கருத்தாய் இருந்திட்டால் இரவென்ன பகலென்ன
சாலை என்ன சோலை என்ன விதி என்ன வீதி என்ன
வீழ்ந்திடாது  வாழ்ந்திடலாம்,வீரநடை போட்டிடலாம்
விண்ணுலகையும் வென்றிடலாம் வெறியுடனே!
சான்றோர் பலர் தோன்றி ,சாறாய்பிழிந்து தந்த
சத்தான வாக்கியத்தை முத்தாய் பகிர்ந்திட்டால்
 சற்றும் தொய்வில்லை,சான்றோன் ஆகிடலாம்
கம்பன் போல் காவியம் படைத்து கவியரசனாய்
கவி பாடி புவியரசையும் புரட்டிடலாம்

அரம் செய்ய விரும்பு என்றாள் ஒளவை பாட்டி
குறளால் குரல் கொடுத்த வள்ளுவனும்
தன் வாக்கால் வாழ்ந்து வாழ்த்திச்சென்றார்

இளைஞனால் தான் விவேகமான இந்தியாவை
இளைய பாரத மாய்படைக்க முடியும் என
பறைசாற்றிச்சென்றார், சுவாமி,யாய் வழ்ந்தவர்,
ஆலயக்கூடத்தைவிட பள்ளிக்கூடமே மேல் என்ற
கனவு மெய்ப்படவேணுமென பாட்டுக்கொருவன்
பாரதியும் அவன் தாசனும் பண் நூரு படைத்திட்ட னர்
பைந்தமிழும் கற்றுத்தந்து இன்றய புலவர்களுக்கு
முன்னோடியாய் முண்டாசு கட்டி நின்றனர் 

கனவு காணுங்களென கலாம் அவர் கூறுகின்றார்
பொருமை காத்திடுங்கள் பெருமை அடைவீர் என
பெருமகனார்  சொல்லிச்சென்றார்,
காந்தி மகான் சொன்ன சொல்லால் உலகின்
கடைசிவரை வாழ்ந்திடுவார்

வலிமையான பாரதம் படைக்க
ஒற்றுமையான தேசம் படைக்க
சுகாதாரமான பாரதம்  படைக்க
விழிப்புணர்வாய் இருந்திடுவோம்
வீரநடை போட்டிடுவோம்……..


மனிதனின் மாண்பு
===============
மனிதன் இவனொரு மகத்தா பிறவி
மண்ணில் இவனொரு புண்ணிபிறவி
கூடிவாழ்வது தான் இவனது பழமை
குடித்து வாழ்வது தான் இவனது புதுமை
கொடுத்துக்கொடுத்தே வாழ்ந்தவன்
கெடுத்திக் கெடுத்தே வாழ்கின்றான்
புறாவில் தூதனுப்ப தொடங்கியவன்
புதுபுது தூதுகள் நிதம்
தினம் படைக்கின்றான்
குரங்கிலிருந்துதான் பிறந்தோம்
என்பதை தன் குணங்கொண்டே
அவ்வப்போது உணர்த்துகின்றான்
கொலையும் கொள்ளையுமே
கொள்கையாக்கியவன்
வலையை விரிப்பதையே
கலையாக்கிக் கொண்டான்
விலைகொடுத்தே பட்டமும்
பதவியும் பெறுகின்றவன்,
துப்பாக்கியும் தோட்டாவுமே
துணைக்கு வைத்திட்டான்
அதிகாரம் கொண்டவன்
சதிகாரனாகவே உள்ளான்
இலவசங்கள் பல உண்டென்பான்
இவன் வசமுள்ள  ஓட்டுக்காக
பதவிக்கி வந்ததுமே
பழைமைதனை மரப்பான்
பரிதவிக்க விட்டுடுவான்
பாமரனை… ..
ஓட்டிட்டவனை
ஓட்டாண்டியாக்கிடுவான்
விசுவாசி நானென்பான்
விலைவாசியை ஏற்றிடுவான்
மின்வெட்டை அதிகரித்து
கல்வெட்டில் காவியம்படைப்பான்
மானத்தின் உச்சமென
பிறந்தவன் அவ மானத்தின்
அச்சமென ஆகிவிட்டான்
கர்மவீரனை கூட தோற்கடித்தவன்
மாவீரனையும் மண்டியிடச்செய்தான் .
மனிதமாண்பு பற்றிப்பேசுகையில்  
மகாத்மா ஒருவரையே
தன் மனதினுள்: புதைத்தான்,
அவரையும் வாழவிடாது
கொன்றே புதைத்தான்,
அவர் கொள்கையாவது
வாழவிட்டு மனித மாண்புதனை போற்றுவோம்!



நம்பி கை வைப்போம்
-------------------------------------


வல்லரசு தேசத்தில் கூட
வாழ்வாதாரம் இழந்த நிலை
எம் நாட்டு மக்களுக்கோ
விலைவாசி உயர்ந்த நிலை
பரண் மேல் பருப்பு விலை
ஒரு ரூபாவாம் அரிசி விலை
தனியார் மயம் தாராள மயம்
இதுதான் இவர்களது தாரகமந்திரம்
இலவசங்கள் பல உண்டென்பார்
இவன் வசமுள்ள ஓட்டுக்காக
பல குடும்பங்கள் வறுமையில் வாட‌
சில கும்பங்களே அரசியலில் ஆட‌
போராட்டம் நடத்தகூட
போதுமான உரிமையில்லை
குண்டர்களும் தொன்டர்களும்
கும்பலாய் தாக்குகின்றனர்
குண்டு களும் தோட்டாகளும்
குறிபார்த்தே இருக்கின்றன‌
கொலையும் கொள்ளயும்
கொள்கையாகி விட்டன‌
புகைப்பதும் குடிப்பதும்
புனிதமாகிவிட்டன‌
நோய்களும் நொடிகளும்
நோகமல் உள்ளன
ம‌னித‌னே ம‌னித‌னை கொல்லும்
மனிதா‌பிமான‌ம் ம‌லிந்து விட்ட‌ன‌
இதயம் கூட இயந்திரத்தில்
இயன்குகின்றனவாம்
இப்படி நாட்டில் பிரச்சினைகளோ
ஏராளம் இதில் எங்கள்
பிரச்சினையும் தாராளம்
கம்பம் நட்டோம்
கம்பி இழுத்தோம்
காளை போல்
கை வ‌ண்டி இழுத்தோம்
சுடும் வெயிலிலும் மண்டியிட்டோம்
க‌டும் குழிகள் பல தோண்டிவிட்டோம்
சாக்க‌டையினுள் புகுந்து ப‌ல‌
ஜாயிண்டு க‌ள் அடித்துவிட்டோம்
க‌ணினியை கூட‌ க‌ச்சித‌மாய்
க‌ண்ணிய‌மாய் இய‌க்குகின்றோம்
சின்ன‌ சின்ன‌ எக்ஜேஞ்சு க‌ளுக்கு
நாங்க‌ளே இய‌க்குன‌ர்க‌ள்
ப‌ல‌ரின் வார‌ச்ச‌ம்ப‌ள‌ம் தான்
எங்க‌ளின் மாத‌ச‌ம்ப‌ள‌ம்
போராட்டம் பல செய்தோம்
பொருமையாய் இருந்திட்டோம்
ச‌ங்க‌த்தின்மேல் ந‌ம்பிக்கை
வைத்தோம் ச‌ம்ப‌ளத்தில்
உய‌ர்வு பெற்றோம்
முருகையா,செல்லப்பா
மீது ந‌ம்பிக்கை வைத்தோம்
அவர்களும் ந‌ம்பி _கைவைத்தார்கள்
நல் அங்கிகார‌ம் பெற்று த‌ந்தார்கள்
அரிய‌ர்சும் வாங்கி த‌ந்தார்கள்
தோழ்கொடுக்கும் தோழமையை
தொடர்ந்து வணங்குவோம்
ப‌ணி நிர‌ந்த‌ர‌ம் என்ப‌தும்
நிக‌ழ்கால‌த்திலேயே நிக‌ழ்துவிடும்
ந‌ம்பிக்கையோடு இருப்போம்
நிம்ம‌தியோடு இருப்போம்
செங்கொடி என்றும்
தாழ்ந்த‌தில்லை
செங்கொடி இய‌க்க‌ம்
என்றும் வீழ்ந்த‌தில்லை !
நாளை நமதே !வெற்றி நமதே!

ஐ எஸ் சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன்
திருப்பூர்

பொன்மானாய் தேடி வந்தோம்
அதுபொய்மானாய் போய் விடுமோ !
பொற்குவியாய் நாடி வந்தோம் 
அதுவெற்குவியாய் ஆகிடுமோ !
பொற்கிளி தான் என எண்ணி , 
யதைபெற்று விட ஓடி வந்தோம்கையில்
கிடைப்பதற்குள் காணாமல் போய்விடுமோ
BSNL  
லில் வேலை இதுபத்திர  மானதுதான் 
எனஎண்ணிபணிந்து பணிந்து தான்பணி செய்தோம்
பத்திர மாய்நினைத்த தின்று வெற்றுப்
பத்திர மாய் ஆகிடுமோ விடுமோ !
இது பொன்முட்டை யிடும் வாத்து,
என பார்த்துத்தான் பணியில் சேர்ந்தோம் 
அதைபொருக்காதநிர்வாகமும்  பொல்லாத 
அரசாங்கமும்பொசுக்கித்தான்போட்டிடுமோ !
 ”பங்கு” போட்டுமாற்றாருக்கு  விற்றுத்தான்தீர்த்திடு
மோபத்தோடு பத்து சேர்ந்த ஆண்டுக்குமேல்
பற்றோடுபகலிரவாய் பாடுபட்டு ,,கம்பம் நட்டு ,
கம்பி இழுத்து ,கடும் குழிகள் பல தோண்டி விட்டு ,
கேபிள்களின் பிணிதீர்த்து ,கணினியும்கற்றுத்
தோய்ந்துவலைத்தளங்களும் வடிவமைக்கும் 
பேராற்றல்பெற்றுகாவல்பணியிலும் களமிரங்கி கால்பதித்து
நடந்துவரும்எங்கள் கனவென்று மாறுமோ !
 நினைவு என்றுநீங்குமோநிரந்தரம் தான் எங்கள் கனா ! 
அது பகலிலேகண்ட  கனாவாய்  பலிக்காமல் போய்விடுமோ
இப்படியெல்லாம் நித்தம் நித்தம்புலம்புகின்ராய்,
வறுமையோடு  நித்தம் யுத்தம் புரிகின்றாய்முடியப்போகுது 
உன்புலம்பல்,பலிக்கப் போகுதுஉன் கனவு,படியப்
போகுது உன்நினைவுஓங்கி ஒலிப்போம் உலகமெல்லாம்
தோல்வி இனிஉனக்கில்லைதுடிப்பாய் இருந்திடு  தோழனே !
தேதி இனி ஏழுக்கு மேல் சம்பள பாக்கி இராதுபாக்கியாய்
இருக்கும் அரியர்சும் பட்டெனவந்து சேருமே 
,EPF பும் ESI யும்இனிமேல் முறையாய் ஆயிடுமே
பத்தாயிரம் சம்பளம் இது முத்தாகக் கிடைத்ததுபோல்
அடுத்தஇலக்கு அது பதிநெட்டாயிரம் .....
இதுதான் முடிவா என்றா லில்லை ……………இல்லை......
வேலைக்கு சமமாய் ஊதியம் பெற்றுத் தீருதல் ஒன்றேதீர்வாகும் 
இதுதான் எமது முடிவாகும்
இடப்பக்கம் செல்லும் என் இனியதோழனே ! 
முன்னேறிசெல்லப்பா” உன்பாதையிலேவெல்லப்பா
உன் கொள்கைதனைஉன் பக்கம் நியாயம் இருக்க ,
நாமும்உன்பக்கமிருக்கஏனிந்தசலசலப்பு எதர்கிந்த 
மனச் சலிப்புதோல்விஇனி உனக்கில்லை 
துவண்டிடாதே தோழனேசிட்டுக்குருவிகள்கூட
 சிக்காமல் போய்விடலாம்விட்டில் பூச்சிகளாய்
வீழ்ந்துவிடமாட் டோம்நாம்ஏட்டில் எழுதியது 
இல்லாமல்போய்விடாதுகாட்டில் லுள்ள மரங்கள் 
கூடவயதானால் கழிந்துவிடும் ,
நாட்டில்லுள்ள நம் ஊழியர்களும் கணிசமாக கழிந்திடுவார் ,
அவர்பணி யில் ஓய்வுதனைப் பெற்றுவிட்டால்,
இத்தணை நாள் பொறுத்திட்டாய் இன்னும் 
மொருஆயிரம் நாள்எண்ணிப்பொறு  பலஆயிரம்
 பேருக்குமேல் நிரந்தரப் பணிகிடைத்திடுமே !
நிம்மதியும் வந்திடுமே ! வான்மதியும் நமை வாழ்த்திடுமே !
நீ தேடி வந்தது பொன்மான்தான்நீ நாடி வந்தது 
பொற்குவிதான்நீவாங்கவந்தது  பொற்கிழிதான்
எனும் காலம் வெகு தூரம்இல்லைசெங்கொடி 
என்றும் தாழ் ந்ததில்லைசெங்கொடி இயக்கம்

என்றும் வீழ்ந்ததில்லைபோராடாமல் வெற்றி இல்லை,
போராட்டம் ஒன்றே வெற்றியின் எல்லை !!!
நாளை நமதே !! வெற்றி நமதே !!!
                       
.எஸ்.சுந்தரக்கண்ணன்