Wednesday 7 May 2008

பாரதியின் கனவு‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍


பாட்டுக்கொருவ‌ன் பார‌தி
பிற‌ர்பாட்டுக்குள்ளும் ஒருவ‌ன் பார‌தி
வீட்டுக்குள் அடிமைகொண்டவள்
வீட்டை விட்டு வெளியில் வரக்கண்டான்

ஏட்டை தொட்டால் தீமை எனறநிலை மாற்றி
ஏட்டையும் பண் பாட்டையும்
பாடுத‌லாய் கண்டான்

மாட்டை கட்டியது போல்
தொழுவில் பார்த்தவளை
மாடு என்ற சொல்லே
செல்வம் என பொருள் கண்டான்

கர்புக்கு பெண்ணை ஒப்பிட்டாலும்
பெண் பாட‌ம் க‌ற்பிப்பதாய்
க‌ன‌வு க‌ண்டான்காத‌லும்

சாதியும் பெண்டிற்கில்லை என்ற‌வ‌ன்
காத‌லில் க‌னிந்து பெண்
காவிய‌ம் ப‌டைக்க‌க்க‌ண்டான்

ப‌ட்ட‌ங்களையும்
பாடதிட்டங்களையும்
பயின்றதோடு ச‌ட்ட‌ங்க‌ளையும்
ஆணுக்கு ச‌ரியாக‌ ஆழ‌க்க‌ண்டான்

விட்ட‌த்தை பார்த்தே
விட‌லை ப‌ருவ‌ம் க‌ழித்த‌வ‌ள்
திட்டம் போட்டு
வாழ்க்கையை திருத்திடக்கண்டான்

சுதந்திரக்கனவு சுந்தரமாய் பலித்தது
நிர‌ந்த‌ர‌ க‌ன‌வுக‌ளும்
நிம்ம‌தியாய் ப‌லித்த‌து
பெண்ணுக்காய் க‌ண்ட‌க‌னா
புதுமை பெண்ணுக்காய்
அமைந்த‌த‌ன்றோ! ! !

No comments: