Wednesday 7 May 2008

வேதனை

குடந்தையில் கருகிய குஞ்சுகளை
கண்டபோது வேதனைசுனாமி என்ற
கொலைகாறலையின் பினாமியை
கண்டபோதும் வேதனைஅஞ்சுபூதத்தின்
அட்டகாசத்தைவிட ஆரறிவு பூதத்தின்
அடாவடியால் வேதனையோ வேதனை

அவள் காதல்
-------------------
கனவுக்கு இதமான அவள் காதல்
மனதுக்குவேறுவிதமானது
உடலுக்கு சிகையான அவள் காதல்
உறவுக்கு பகையானது
இன்பத்தின் தேடலான அவள் காதல்
துன்பத்தின் பாடலானது
எண்ணத்தில் கூடலான அவள் காதல்
ஏக்கத்தில் ஊடலானது
சம்சாரமாக்க துடித்த அவள்காதல்
மின்சாரமானது
ஜாலியாக போன என்காதல்
நான் காலியாக காரணமும் ஆனது

அடுத்த(அ)வள்(ன்)
-----------------------
தென்றலின் இனிமை கொண்டவள்
தேனீர்சுவையை தந்தவள்வந்தவள்
என் மனதில் நின்றவள்
வானத்து நிலவின் ஒளிகொண்டவள்
என்னவள் என்றவள் அடுத்தவ(ள்)ன் நாகிவிட்டாள்

இன்றைய காதல்
==============
மனம் வசப்பட்டதால் ஏற்பட்ட காதல் -அன்று!
சதைவசப்பட்டதால் ஏற்பட்ட காதல் - இன்று
அன்றய காதல் கல்லறயில் அல்லது
கல்யாணத்தில் முடியும்!
இன்று சில்லறையில் அல்லது
சில அறையில்!முடியும்!

இ)தையல் வலி
--------------------
உன் பார்வையெனும் ஊசியில்
என் அன்பெனும் நூல் கோர்த்து
நம் இருவர் இதயத்தையும்
ஒன்றாய் தைத்தாய்
தைத்த நீயே! பிரித்து விட்டாய்!
தைத்த போது வலிக்காத இதயம்
தையல் பிரித்தபோது வலிக்கிறதே!!!

மாற்றம்
-----------
காலங்கள் மாறலாம்
நாகரீக கோலங்கள் மாறலாம்
ஆனால் நம்காதல் மட்டும்
மாறாது என கனிந்தமொழி
பேசியவள்கடைசியில்
என்கணவன் மட்டும்மாறலாம்
என் கணிசமாக கூறிவிட்டாள்!

காதல் + நீ = காதலி
----------------------------------------
முந்தானை முடிப்பினிலே
முடிந்து வைத்த முக்கனி போல்
சந்தனத்தில் சவ்வாதை
சமமாக சேர்த்ததுபோல்
செவ்வாழைக்கனியினிலே
செய்துவைத்த செந்தூரம் போல்
சங்கீத சன்னதியில்சந்தங்களை
கோர்த்ததுபோல்
சிந்துகின்ற வான்மழையும்
தங்குகின்ற தாமரையே
ஏங்குகின்ற என்மனதில்
தூங்குகின்ற தூரிகையே
பார்த்து நிற்க்கும் என்விழியை
காக்கவைக்கும் காரிகையே
என்காதல் தனை சொன்னபின்னும்
உன்காதல் கண்பாரா காதலியே !
உன்முகத்தில் தெரியுதடி ஓராயிரம்
ஒளிநிலவு காதலெனும் கனிரசத்தை
என்மீது கொட்டுவாயோ ! துளியளவு!
என்காதல்லியாய் நீ ஆகிவிட்டால்
என்மனைவியாய் நான் ஆக்கிடுவேன் !!!

அன்புள்ள அப்பாவுக்கு
---------------------------
‍‍‍‍
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
தந்தை போலொரு மனிதர் தரணியிலில்லை
ஐம்ப‌துஆண்டுக‌ள் அன்போடு வாழ்ந்தாலும்
ஐய‌மில்லை ய‌ய்யா ஊம் பாசம் பேரிய‌தையா
க‌ண்போல‌ வ‌ள‌ர்த்த‌ நீங்க‌ள் கண், க‌ல‌ங்க‌ விட்டு
க‌ண‌வ‌ன் பிரிவால் க‌ல‌ங்கும் என் தாயின்
க‌ண்ணீரை க‌ண்டீரோ? காணாது சென்றீரோ?
அந்த‌ நாள் நினைவுகளும் எங்களோடு வாழ்ந்த ‌
அந்த‌நாள் ஞாப‌க‌ங்கங்களும் நிழலாடுகின்றதையா
அன்பை பொழிந்துவிட்டு அன்னையாய்யாக்கிட்டு
அன்பை சுமந்து அல்லல் படும்படியாய்
ஆக்கிட்டுச்சென்றீரோ!! அவ‌ச‌ர‌மாய் சென்றீரோ!
ஐந்தாறு மாதங்களில் அவிந்து விடும் அவர் நினவு
பதினாறுக்கு வந்தாரும் சொன்னார்கள்
வாயார‌ அழுதார்க‌ள் ! ஆண்டுக‌ள் ப‌ல‌ ஆயினும்
உம் நினைவுக‌ள் அழிய‌வில்லை
எம் நெஞ்ச‌மும் மற‌‌க்க‌வில்லை
த‌வ‌ருக‌ள் செய்த‌ போது எனை த‌ண்டித்தீர்க‌ள்
த‌ரங்கெட்ட‌ வார்த்தையில் திட்டிய‌போது
எனை ம‌ன்னித்தீர்க‌ள்
அன்று வாங்கிய அடிகளால் உடல் நொந்தது
இன்று வாங்கிய அடியால் உள்ளம் நொருங்கியது!
தந்தை சொல் கேட்ட தணையன்
தரங்கெட்டு போனதில்லை,த‌ந்தை வ‌ழி ந‌ட‌ந்தோன்
ம‌ன‌ங்கெட்டு போன‌தில்லை !
நீர் இல்லாத‌ வாழ்க்கை நீரில்லா மீன் போலானது
நீரில்லா நீறோடையில் நீந்துவதற்கு "நீர்" இல்லையே!
என் தாய்
-------------
‍உயிருக்குள் உயிர் வளர்தாய்
உலகத்தையே பார்க்கவைத்தாய்
ஊனிற்க்கு உதிரம் கொடுத்தாய்
உன்னில் எனைப் பார்த்தாய்
அறிவுக்கு அறிவு கொடுத்தாய்
அன்புக்கு அன்பை கொடுத்தாய்
கண்ணின் கரு விழிதந்தாய்
காலால் நடக்க வைத்தாய்
கைகளால் செயல் படவைத்தாய்
காதின் ஒலியால் கேட்கவத்தாய்
நினைவில் என்றும் நினைக்க‌ வைத்தாய்
நித‌மும் பேசும் வார்த்தை தந்தா‌ய்
வெண்ணில‌வாய் குளிர்தந்தாய்
வெண்பனியாய் வெப்பம் தணித்தாய்
தென்றல் போல் சுகம் தந்தாய்
தேனீர் போல் சுவை த‌ந்தாய்
திக‌ட்டாத‌ இன்ப‌ம் த‌ந்தாய்
இத்த‌னையும் த‌ந்தாய்
நானுன‌க்கு என்ன‌ த‌ந்தேன்!
என்னை த‌ந்த‌வ‌ளுக்கு
என்ன‌ த‌ந்தால் ஈடாகும்!


என்னவன்
------------
‍‍‍‍‍‍‍‍‍என்னவனே என் மனதை
கொள்ளை கொண்டவனே
மன்னவனே என்னுயிரை
மீட்டுத்தந்தவனே
உன் புகழை பாடுதற்கு
உரியவள் என்றும் நான்தானே
தேனமுதில் பிழிந்தெடுத்த
தெள்ளமுதும் நீதானே
பாலமுதில் கடைந்திட்ட‌
வெண்நெய்யும் நீதானே
சிங்கமென நீ நடந்து
சிரித்துவரும் வேளையிலே
தங்கமென தாவணிகள்
தானாகவே வந்தாலும்
தடுக்கிவிழா பார்வைதனை
தரணியங்கும் படைத்திட்டாய்
கன்னியரின் பார்வையிலோ
காளையர்கள் அழிந்திடுவ‌ர் என்
க‌ண்ண‌னுன் பார்வையிலோ
கன்னிய‌ர்க‌ள் வழிந்திடுவ‌ர்
வான‌த்தில் இருப்ப‌தோ
ப‌ல‌ந‌ட்ச‌த்திர‌ம் என் ம‌ன‌
வான‌த்திலோ நீ யொரு
துருவ‌ ந‌ட்ச‌த்திர‌ம்
குடிப்ப‌ழ‌க்க‌ம் இல்லாநீ ந‌ல்ல‌
குடிப்ப‌ழ‌க்க‌ம் உள்ள‌வ‌ன்
மான‌த்திற்கு மானைச்சொல்வ‌ர் உன்
த‌ன்மான‌த்திற்கு ய‌த‌னைச்சொல்வேன்
க‌ண்ட‌வ‌ள் பின் செல்லாது எனைக்
க‌ண்ட‌ பின் காத‌ல் கொண்டாயே
மாற்றாளுக்கு ம‌னைவியெனும்
மாங்க‌ல்ய‌த்தை பூட்டி விட்டால்
மான‌த்தோடு மாண்டிடுவேன்
மாம‌னுன் காத‌லியாய்!
-----------------------------------
ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன்
issundarakannan7@gmail.com

No comments: