Wednesday 7 May 2008

ச‌ண்டாளி!

கருவிழிகளின் மின்னல் கீற்றுகளாய்
கண்டவளின் கண்கவர் கண்களில்
வண்ணத்துப் பூச்சிகளும் வட்டமிட
வண்டுகளும் மலெரென்று மொய்த்துவிட

நான்மட்டும் விழாதிருப்பெனோ !
நானும் விழுந்துவிட்டேன்
விண்ணவள் கண்ணுக்குள் !
நிலவவள் நெஞ்சுக்குள் !

பார்த்தோம் ப‌ழ‌கினோம்
பாச‌ம் ப‌கிர்ந்தோம்
தாகம் தணிக்கவே
தனிமை நாடினோம்

காத‌ல் தாக‌த்தால்
க‌ட்டிய‌ணைத்து முத்த‌மிட‌
காட்டிய‌ அவ‌சரத்தில்
காத‌லிய‌வ‌ள் சொன்னாள்
க‌ல்ய‌ண‌ம் ஆக‌ட்டும் மென்று

காத்திருந்தேன் ம‌ணிக‌ண‌க்கில்
பாத்திருந்தேன் நாள்க‌ண‌க்கில்
பெண்பார்க்கும் ப‌ட‌த்தில்
பித்தலாட்டம் செய்துவிட்டாள்

க‌ண்ட‌ அவ‌னை க‌ண‌வ‌னென்றாள்
காத‌ல‌ன் எனை க‌ள்வ‌னென்றாள்
வ‌ண்டாய்சுற்றிய எனக்கு
வ‌ண்டாள் தந்த பட்டம் பைத்தியமென்று

ஏனென்ற‌ போது நீ என் சாதி யில்லை
ம‌த‌மும் இல்லை என‌வே ந‌ம் திரும‌ண‌த்தில்
ச‌ம்ம‌த‌மும் என‌க்கில்லை என்றாள் ச‌ண்டாளி!

No comments: