Sunday 28 May 2017

” மீண்டும் வேண்டும் விடுதலை “


பாரதி பாடித் துடித்த விடுதலை !
காந்தி மகான் காணத் துடித்த விடுதலை !
பகலுமன்றி இரவுமன்றி நள்ளிரவில்
விடியலாய் விடிந்தது ,விருப்பமாய் விளைந்தது.
விடுதலை தேசமாயினும் மீண்டும் ,
”வேண்டும் விடுதலை” என வேண்டித்தான்
நிற்கின்றோம் விருப்பித்தான் கேட்கின்றோம்.
வறுமையும், ஊழலும் நிரந்தரம் ஆகிவிட்டது
விலைவாசி உயரத்தில் , விசுவாசம் பள்ளத்தில்
உள்ளத்தின் கனவுகளில் லச்சமும் கோடியுமே !
கல்லறை நிலங்கள் கூட காணாமல் போகும் நிலை
சில்லறை போல் வாணிபமும் சிதறியே போன கதை
அண்டைநாட்டு தொழிலாளிகள் நம்நாட்டின் முதலாளிகள்
தண்ணீர் தண்ணீர், எனக் கண்ணீர் வடிக்கப் பல,
தேசங்கள் இருக்க,  பாட்டில் போட்டு விற்றுவரும்
பார்களையும் தாண்டி இன்று அரசே விற்கிறது.
பாஸ்மார்க் வாங்கவேண்டியவன் டாஸ்மாக் வாயிலில்...
பாதைகாட்டவேண்டிய அரசு போதைஏற்றும் வேலையில்...
பொதுத்துறை எல்லாம் தனித்துறை ஆக்கிவிட்டால்
துரை களுக்கு  இங்கே என்ன வேலை ?
சாதிக்க பிறந்தவனை சாதிக்குள் மாட்டிவிட்டு
மதமும், மொழி யுமாய் பிரித் தாளும்
சூழ்ச்சிக்கு , வீழ்ச்சியே ! என்றும் காட்சியாய் வேண்டும்  
தாத்தா கொடுத்ததை பேரன் கெடுப்பதும்,
மாமியார் தந்ததை மருமகள் எடுப்பதும் என,
மாறி மாறி தொடர்ந்த கதை முடிந்தது ,
ஆனால் இப்போது முடிந்த கதை  மீண்டும் தொடந்ததே!

என் சாதி, என் மதம் என சாக்கு போக்கு
சொல்லாமல் வாக்கு மாற்றி அளித்துவிட்டால்
உழைப்பவனுக்கு அரியணை கிடக்கும்,இதுவரை
சொன்ன சொல்லுக்கும் விடுதலை கிடைக்கும்,  
நம்மோடு சிறைபட்டு  நிற்கும் ஒப்பந்தத்திக்கும் ,
விடுதலை கிடத்து விடும்,  BSNL வீதியில் நாமெல்லம்
நிரந்தரமாய் வலம் வரலாம்  .
                               ஐ.எஸ். சுந்தரக்கண்ணன்

                           ஒப்பந்த தொழிலாளர்,திருப்பூர் .

No comments: